அயலகத் தமிழர் தினம்-2023


The 2023 edition of the "World Tamilar Diaspora Day," with the overarching theme of "Ulaguengum Tamil" took place on January 11th and 12th at the Kalaivanar Arena in Chennai. The event was organized under the guidance of the esteemed Chief Minister of Tamil Nadu.

Distinguished leaders from diverse nations graced the occasion as honored guests. Furthermore, executives from Tamil Sangha representing numerous countries actively engaged in discussions covering a wide array of topics. The event also featured a vibrant cultural program.

அயலகத் தமிழர் தினம் 2023, “உலகெங்கும் தமிழ்“ என்ற கருப்பொருளில் 11.01.2023 (ம) 12.01.2023 ஆகிய நாட்களில் சென்னை கலைவாணர் அரங்கில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் மாண்புமிகு மலேசிய நாட்டு அமைச்சர் திரு சிவகுமார் வரதராஜ், மாண்புமிகு இலங்கை நாட்டு அமைச்சர் திரு அரவிந்த்குமார், மாண்புமிகு நியு கயானா நாட்டு ஆளுநர் திரு சசீந்திரன், கயானா நாட்டு முன்னாள் பிரதமர் டாக்டர் மோசஸ் வீராசாமி நாகமுத்து, மொரிஷியஸ் நாட்டு முன்னாள் அமைச்சர் டாக்டர் பரமசிவம், இலங்கை நாட்டு முன்னாள் முதலமைச்சர் திரு செந்தில், மலேசிய நாட்டு முன்னாள் அமைச்சர் திரு சரவணன், இலங்கை நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு சுமன், திரு மனோ, ரிவர்டன் ஆஸ்திரேலியா உறுப்பினர் திரு ஜெகதீஷ், சிங்கப்பூர் நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் திரு தினகரன், துபாய் டெக்டான் குழுமத்தின் தலைவர் திரு லட்சுமணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். மேலும், பல்வேறு நாடுகளில் உள்ள தமிழ் சங்க நிர்வாகிகள் பங்கேற்று, பல்வேறு தலைப்புகளில் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டது. கலை மற்றும் கலாச்சார நிகழ்வுகளும் நடைபெற்றன.

  1. முக்கிய விருந்தினர்கள் (VVIPs - 13 நபர்கள்) ஹோட்டல் லீலா பேலஸில் தங்க வைக்கப்பட்டனர். மேலும், இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து இந்நிகழ்வில் பங்கேற்ற தமிழ் சங்கங்களின் பிரதிநிதிகள் (24 நாடுகள் மற்றும் 10 மாநிலங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 133 சங்கங்களின் 280 பிரதிநிதிகள்) மூன்று நாட்கள் 5 நட்சத்திர மற்றும் 4 நட்சத்திர உணவகங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

  2. வருகைப்புரிந்த மதிப்பிற்குரிய விருந்தினர்களுக்கு விமான பயணச்சீட்டுகள்ள் ஏற்பாடு செய்யப்பட்டு, அவர்களின் சொந்த நாடுகளில் இருந்து சென்னைக்கு அழைத்துவரப்பட்டனர். மேலும், நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் போக்குவரத்துச் சேவைகள் வழங்கப்பட்டு, நிகழ்வு நடைபெற்ற அரங்கத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

Lead Management

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Proin eget eleifend dolor, et maximus enim.

Lead Management

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Proin eget eleifend dolor, et maximus enim.

reach_us