நலன், மேம்பாடு மற்றும் பாதுகாப்பின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு அரசு அயலகத் தமிழர் அடையாள அட்டை சமுதாயத்திற்கு காப்பீட்டுத் திட்டத்தை வழங்குகிறது.
விபத்து மரணத்திற்கு ரூ. 10 இலட்சம் மற்றும் நிரந்தர இயலாமை / உடற்குறைபாட்டிற்கு ரூ.5 இலட்சம்.
விபத்தினால் நிரந்தர இயலாமை / உடற்குறைபாடு / வேலையை தொடர இயலாத நிலை ஏற்பட்டால், பாதிக்கப்பட்ட நபர் ஒரு உதவியாளருடன் தமிழ்நாடு திரும்பிட ஏதுவாக விமான பயணச்சீட்டு ஏற்பாடு செய்து தரப்படும். மேலும், உடன் வரும் உதவியாளருக்கு தேவையின் அடிப்படையில் இரு வழி பயணச்சீட்டு ஏற்பாடு செய்யப்படும்.
18 முதல் 55 வயது வரையினராக இருத்தல் வேண்டும்.
குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு செல்லுபடியாகும் கடவு சீட்டு மற்றும் வேலை வாய்ப்பு ஆவணங்களுடன் அயல்நாட்டில் வசிக்கும் அல்லது பணிபுரிபவராக இருக்க வேண்டும்.
ஏற்கனவே தமிழகத்திற்கு வெளியே உயர் கல்வி பயிலும் மாணவர்கள்.
தீவிர மற்றும் தொடர் சிகிச்சை தேவைப்படும் கீழ்க்கண்ட நோய்களுக்கான மருத்துவ செலவிற்காக ரூ. 1 லட்சம் வரை வழங்கப்படும்.
இத்திட்டம் விருப்பத்தின் பேரில் விபத்து காப்பீட்டு திட்டத்துடன் கூடுதலாக ஆண்டுக்கு ஒரு முறை ரூ. 550/- செலுத்தி இத்திட்டத்தில் இணையலாம்.
இத்திட்டத்தின் கீழ் வரும் நோய்கள்
Cancer
Kidney failure
Primary pulmonary arterial Hypertension
Multiple Sclerosis
Major organ transplant
Coronary artery by-pass grafts
Aorta graft surgery
Heart Valve surgery
Stroke
Myocardial Infarction (First heart attack)
Coma
Total Blindness
Paralysis
கடவு சீட்டின் (Passport) முன் பக்க மற்றும் பின் பக்க நகல்.
விசா / சிவில் ஐடி / பணிச் சான்று / இக்காமா (Iqama) ஆகியவற்றின் நகல்.
மாணவர் அடையாள அட்டைக்கு கல்லூரி / பல்கலைகழக அடையாள அட்டையின் நகல்.
விண்ணப்பதாரரின் புகைப்படம் மற்றும் கையெழுத்து.
As part of welfare, development & safety, Government of Tamilnadu is providing Insurance Scheme for NRT Society.
For Accidental death Rs.10 lakh and for permanent disability / disability Rs.5 lakh will be provided.
In case of permanent disability / disability / inability to carry on work (or) study due to accident, air ticket will be arranged for return to Tamil Nadu with an attendant. Also, a two-way ticket will be arranged for the accompanying attendant as per requirement.
Employees and students aged between18 to 55 are eligible to enroll under this scheme.
Must be living or working abroad with passport and employment documents valid for at least 6 months.
Students already pursuing higher education outside Tamil Nadu also can apply.
Medical treatment for following diseases requiring intensive and continuous treatment Rs. 1 lakh will be given. The scheme is in addition to an optional accident insurance scheme of Rs. 550/- per year to join this scheme.
Passport Copy (First & Last page).
Visa / Civil ID / Employment Certificate / Iqama copy.
For Students Id Card College / University Identity card copy
Applicants Photo and Signature.
அயலகத் தமிழர்களுக்கான காப்பீட்டு திட்டமானது (வெளிநாடுகளிலும், இந்தியாவிலும் வாழும் அயலகத் தமிழர்களுக்கு காப்பீட்டுத் தொகையை வழங்கும் திட்டமாகும். விண்ணப்பதாரர் பதிவுசெய்யப்பட்ட அயலகத் தமிழர் அடையாள அட்டை வைத்திருப்பவராக இருந்தால் மட்டுமே அயலகத் தமிழர் காப்பீடு பெற முடியும்.
அடையாள அட்டை வைத்திருப்பவருக்கு குறைந்தபட்சம் ரூ.1,00,000/-க்கான தீவிர நோய்க்கான காப்பீடு; கட்டாயமற்ற கூடுதலான தனிநபர் விபத்து காப்பீடு ரூ.10,00,000/- வரை.
புற்றுநோய், சிறுநீரக செயலிழப்பு, பக்கவாதம் உள்ள பல தீவிர நோய்கள் அடங்கும். (இந்தப் பக்கத்தின் முடிவில் விரிவான பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது).
தீவிர நோய்க்கான காப்பீட்டுத் தொகைக்கான குறைந்த வருடாந்திர கட்டணத் தொகை ரூ.350 (18% சரக்கு மற்றும் சேவை வரியைத் தவிர்த்து).
கட்டாயமற்ற தனிநபர் விபத்துக் காப்பீட்டுத் திட்டத்திற்காக ரூ.395 (18% சரக்கு மற்றும் சேவை வரியைத் தவிர்த்து) குறைந்த வருடாந்திர கட்டணத் தொகை.
ரூ.1,750 கட்டணத் தொகை செலுத்தி தீவிர நோய்க்கான காப்பீட்டை ரூ.5,00,000/- வரை அதிகரிக்கலாம். (பக்கத்தின் முடிவில் விரிவான பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது).
விண்ணப்பதாரர் 18 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். கட்டாயமற்ற தனிநபர் விபத்துக் காப்பீட்டிற்கு, 18 முதல் 70 வயதுக்குள் இருக்க வேண்டும்.
வேலை தொடர்பான சரியான ஆவணங்கள் இருக்க வேண்டும்.
Critical illness cover
தனிநபர் விபத்து காப்பீடு
தீவிர நோய் பாதுகாப்பு
அனைத்து உரிமைகோரல்களும் இந்திய தேசிய ரூபாயில் (INR) மட்டுமே செலுத்தப்படும்.