எனது கிராமம்


அயலகத் தமிழர்கள் தான் பிறந்து வளர்ந்த சொந்த ஊரில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்திடவும், ஊர் மக்களின் கல்வி மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்திடவும் “எனது கிராமம்” என்ற இத்திட்டம் துவங்கப்பட்டும், இதில் பள்ளி, மருத்துவமனை, நூலகம் போன்ற கட்டிடங்களைக் கட்டித்தரவும், சீரமைத்திடவும் அயலகத் தமிழர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.

இத்திட்டத்தில் பங்கேற்க உள்ள அயலகத் தமிழர்கள் வாயிலாக அவர்களது சொந்த ஊரில் மேற்கொள்ள இருக்கும் நடவடிக்கைகள் :

  1. ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவமனை போன்றவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்.

  2. அங்கன்வாடி, பள்ளி மற்றும் கல்லூரிகளின் ஆய்வகங்கள், கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், சமையல் கூடம், சுற்று சுவர், விளையாட்டு மைதானம், பூங்காக்கள், நூலகங்கள் போன்வற்றை உருவாக்குதல் மற்றும் மேம்படுத்துதல்.

  3. கிராமப்புறங்களில் சாலை, பாலம் போன்ற வசதிகளை உருவாக்குதல் மற்றும் மேம்படுத்துதல்.

  4. குடிநீர் வசதிகளை ஏற்படுத்தி தருதல், மழை நீர் சேகரிப்பு தொட்டி, நீர்த்தேக்க தொட்டி, குடிநீர் குழாய் வசதிகளை ஏற்படுத்துதல், குளம், குட்டை போன்றவற்றை பழுது பார்த்தல் மற்றும் பராமரித்தல்.

  5. நூலகத்தின் தரத்தினை உயர்த்தும் விதமாக, இணைய வசதி ஏற்படுத்தி தருதல், போட்டி தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் புதிய புத்தகங்கள் வழங்குதல்.

  6. சுகாதார வசதிகளை மேம்படுத்தும் விதமாக கழிவறை, கழிவு நீர் கால்வாய் கட்டிதருதல், திட கழிவு மேலாண்மையை மேம்படுத்துதல்.

  7. பூங்காக்கள், நீருற்று மற்றும் பிற சமுதாய கட்டிடங்கள்.

இப்பங்களிப்பு பொருளாதாரரீதியாக மட்டுமின்றி, தொழில்நுட்பம், தாங்கள் சார்ந்த துறையின் அனுபவத்தையும் அறிவையும் பகிர்தல், வேலைவாய்ப்பு மற்றும் தொழில் ஏற்படுத்தல், தொழில் முனைவோருக்கான பயிற்சி என எந்த வகையிலும் அமையலாம். ஒவ்வொரு பங்களிப்பும் இத்துறை மூலம் மிகவும் வெளிப்படை தன்மையோடும் அரசின் முழுமையான வழிகாட்டுதலுடனும் அதிவிரைவாக செயல்படுத்தப்படும்.

இவ்வாறு பங்களிப்பு மேற்கொள்ளும் தனிநபர், அமைப்பு அல்லது நிறுவனத்திற்கு தேவையான அனைத்து ஊக்கமும், உதவியும் இந்த அரசால் வழங்கப்படும்.

மேலும் பெறப்படும் பங்களிப்புகள் நேரடியாக அரசின் வங்கி கணக்கில் செலுத்தி உரிய சான்றிதழ், வரிச்சலுகை மற்றும் ஆவணங்கள் வழங்கப்படும்.

இங்ஙனம் பெறப்பட்ட நிதி மூலம் நிறைவேற்றப்பட்ட வளர்ச்சி பணிகள் குறித்து பங்களித்தவர்களுக்கு முழுமையான தகவல்களும் வழங்கப்படும். கல்வி, நல்வாழ்வு மற்றும் சுகாதாரம், விவசாயம், குடிநீர், பாசனம், சாலை வசதி, போக்குவரத்து, பெண்கள் பாதுகாப்பு, தமிழ் மொழி வளர்ச்சி, சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு, தொழிற்சாலை, தொழில்நுட்பம் என எந்த துறையிலும் பங்களிப்பை வழங்க வரவேற்கப்படுவார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறு பெறப்பட்ட பங்களிப்புகள் குறித்த பட்டியல் தொகுக்கப்பட்டு  ஆண்டு அறிக்கையாக வெளியிடப்பட்டு, சிறந்த பங்களிப்பினை வழங்கியவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12 ஆம் நாள் கொண்டாடப்படும் “அயலகத் தமிழர் தினத்தில்” அரசின் சார்பில் விருது வழங்கி கௌரவிக்கப்படும்.

Do Lorem ipsum dolor sit amet, consectetur elit. Proin eget eleifend dolor, et maximus enim. Donec metus tellus, ornare in fermentum in, vulputate ut lorem, donec metus tellus, ornare in fermentum in, vulputate ut lorem.

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Proin eget eleifend dolor, et maximus enim.

Lead Management

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Proin eget eleifend dolor, et maximus enim.

Lead Management

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Proin eget eleifend dolor, et maximus enim.

reach_us