கல்வி உதவித்தொகை


அயல்நாடுகளுக்கு பணியின் பொருட்டு சென்று அங்கு இறக்கும் குறைந்த வருவாய் பிரிவைச் சேர்ந்த தமிழர்களின் குடும்பத்திலுள்ள கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்விக்கான சிறந்த வாய்ப்புகளை வழங்குவதற்கும், உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அவர்களின் விகிதத்தை அதிகரிப்பதற்கும், கல்வியின் அவர்களின் ஆர்வத்தினை அதிகரிப்பதுமே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

தமிழ்நாடு அரசின் பத்தாம் வகுப்பு (10வது), மேல்நிலை இரண்டாம் ஆண்டு (12வது) தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அல்லது அயல்நாடுகளில் அதற்கு இணையான படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள். மருத்துவக் கல்லூரி படிப்பு / பொறியியல், பட்டப்படிப்பு / வேளாண்மை பொறியியல் (Agri. Eng) மற்றும் ஏதேனும் ஒரு துறை, டிப்ளமோ படிப்பு ஏதேனும் ஒரு துறையில் அல்லது அதற்கு இணையான படிப்புகள்; அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் மூலம் தொழிற்கல்விப் படிப்புகள் / பாலிடெக்னிக்குகள் (Polytechnic) / தொழில் பயிற்சி நிறுவனங்கள்.

கல்வி நிறுவனங்களில் சேர்க்கை (Admission) பெற்ற மாணவர்கள் மட்டுமே இக்கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

முழு பாடத்திட்டத்திற்குமான கால அளவிற்கும் உதவித்தொகை வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் அனைத்து கட்டணங்களும் பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும், இதற்காக மாணவர்கள் ஏதேனும் ஒரு அரசு அங்கீகரிக்கப்பட்ட வங்கியில் வங்கி கணக்கைத் தொடங்க வேண்டும்.

1 Post Graduate Degree in Engineering Rs.12,000
2 Post Graduate Degree in Medical Rs.12,000
3 Post Graduate Degree in Law Rs.12,000
4 Post Graduate Degree in Agriculture Rs.12,000
5 Post Graduate Degree in Education Rs.12,000
6 Post Graduate Degree in Physical Education Rs.12,000
7 Bachelor Degree in Engineering Rs.8,000
8 Bachelor Degree in Medical Rs.8,000
9 Bachelor Degree in Law Rs.8,000
10 Bachelor Degree in Agriculture Rs.8,000
11 Bachelor Degree Education Rs.8,000
12 Bachelor Degree in Physical Education Rs.8,000
13 Diploma in Engineering Rs.5,000
14 Diploma in Medical Rs.5,000
15 Diploma in Education Rs.5,000
16 Diploma in Physical Education Rs.5,000
17 Higher Secondary Rs.4,000
18 I.T.I Rs.4,000
  1. Should have contributed to Labour Welfare Fund.

  2. Employees monthly salary not exceeding Rs.25,000/-(Basic pay + DA).

  3. Should have completed 16 years of age, Employee's wife and unmarried daughter & sister who are dependants of Employee’s.

வ.எண் பாடப் பிரிவு உதவித்தொகை ரூ.
1 10 – ஆம் வகுப்பு Rs.3,000
2 11 மற்றும் 12 – ஆம் வகுப்பு (மேல்நிலைக் கல்வி) Rs.4,000
3 தொழிற் பயிற்சி கல்வி Rs.4,000
4 பொறியியல் பட்ட மேற்படிப்பு Rs.12,000
5 மருத்துவ பட்ட மேற்படிப்பு Rs.12,000
6 சட்ட பட்ட மேற்படிப்பு Rs.12,000
7 விவசாய பட்ட மேற்படிப்பு Rs.12,000
8 ஆசிரியர் பயிற்சி பட்ட மேற்படிப்பு Rs.12,000
9 உடற்பயிற்சி கல்வி பட்ட மேற்படிப்பு Rs.12,000
10 பொறியியல் பட்டப்படிப்பு Rs.8,000
11 மருத்துவ பட்டப்படிப்பு Rs.8,000
12 சட்டப் பட்டப்படிப்பு Rs.8,000
13 விவசாய படிப்பு Rs.8,000
14 ஆசிரியர் பயிற்சி பட்டப்படிப்பு Rs.8,000
15 உடற்பயிற்சி கல்வி பட்டப்படிப்பு Rs.8,000
16 பொறியியல் பட்டயப் படிப்பு Rs.5,000
17 மருத்துவப் பட்டயப் படிப்பு Rs.5,000
18 ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பு Rs.5,000
19 உடற்பயிற்சி கல்வி பட்டயப் படிப்பு Rs.5,000
  1. அயலகத் தமிழர் நலவாரியத்தில் பதிவு பெற்று, பதிவு காலாவதியாகமல் உள்ள (இறப்பின் போது) அயலகத் தமிழரின் குழந்தைகளுக்கு வழங்கப்படும்.

  2. முறையான வேலை வாய்ப்பு ஆவணங்களுடன் அயல்நாடுகளில் பணிப்புரிந்து மரணமடைந்த தமிழர்களின் குழந்தைகளுக்கு தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் நிலையில் அம்மாணவர்களுக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்படும்.

  3. சான்றிதழ் / பட்டம் பெற தேவைப்படும் சாதாரண காலத்திற்கு மேல் உதவித்தொகை வழங்கப்படாது.

  4. ஒரு குடும்பத்தில் இரண்டு மாணவர்களுக்கு மேல் உதவித்தொகை வழங்கப்படாது.

  5. கல்லூரி / பல்கலைக்கழகம் / நிறுவனத்தினால் தீர்மானிக்கப்படும் வருகையினை அளவுகோலை மாணவர்கள் தவறாமல் பெற்றிருக்க வேண்டும்.

  6. பல கல்லூரிகளில் இரண்டு கட்டமாக / அரையாண்டு கட்டணமாக, கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதால், கல்வி ஆண்டின் துவக்கத்தில் முழு ஆண்டிற்கான செலவீன விவரம் கல்லூரி முதல்வரின் ஒப்புதலுடன் பெற்று வழங்கப்பட வேண்டும்.

  7. மாணவர் உதவித்தொகைக்கான விதிமுறைகள் அல்லது நிபந்தனைகளை மீறியிருந்தால், அவர்களுக்கான உதவித்தொகை வழங்குவது இடைநிறுத்தப்படலாம் அல்லது ரத்துசெய்யப்படலாம் மற்றும் இது தொடர்பான அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையாரின் முடிவே இறுதியானது.

  8. ஒரு மாணவர் தவறான அறிக்கை / சான்றிதழ்கள் மூலம் உதவித்தொகை பெற்றிருப்பது கண்டறியப்பட்டால், அவரது உதவித்தொகை உடனடியாக ரத்து செய்யப்படும் மற்றும் செலுத்தப்பட்ட உதவித்தொகை திரும்பப் பெறப்படும்.

Lead Management

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Proin eget eleifend dolor, et maximus enim.

Lead Management

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Proin eget eleifend dolor, et maximus enim.

reach_us