தமிழ்ச்சங்கம் பதிவு செய்தல்


  1. அயலக தமிழ் சங்கங்களின் இரண்டு பிரிவுகள்,

    அ) அயல்நாட்டிலுள்ள தமிழ்ச்சங்கம்

    ஆ) இந்தியாவிலுள்ள தமிழ்ச்சங்கம் (தமிழ்நாட்டிற்கு வெளியே)

  2. விண்ணப்ப படிவம் :

    சங்கங்களை பதிவு செய்வதற்கான இவ்வாணையரக வலைதளம் வாயிலாகவும், இவ்வாணையரகத்தில் நேரடியாகவும் பெறலாம்.

  3. சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள். (பின்வரும் ஆவணங்களின் நகல்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்)

    அ) (i) Aசங்கம் அமைக்க முடிவு செய்த முதல் கூட்டத்தின் சான்றளிக்கப்பட்ட நகல், கூட்ட குறிப்புகளில் அலுவலகப் பொருப்பாளர்களின் கையொப்பம் இருக்க வேண்டும் (வெளிநாட்டில் உள்ள சங்கங்களில்)
        (ii)இந்தியாவில் உள்ள சங்கங்கள், Charitable Societies Act 1860ன் கீழ் சங்கத்தினைப் பதிவு செய்ததற்கான சான்றிதழின் நகல், அரசிதழ் பதிவுபெற்ற அதிகாரியால் சான்றளிக்கப்பட்டது

    ஆ) சங்கத்தின் விதி

    இ) சங்க உறுப்பினர்களின் பெயர், முகவரி மற்றும் மின்னஞ்சல்

    ஈ) சங்க நடவடிக்கைகளின் கடைசி மூன்று வருட ஆண்டறிக்கை

    உ) கடைசி மூன்று வருட சங்க கணக்குகளின் தணிக்கை செய்யப்பட்ட அறிக்கை

  4. சங்கங்கள் தங்களை பதிவு செய்வதற்கான கட்டணம் ஏதுமில்லை.

  5. சங்கத்தினை பதிவு செய்வதற்கான நடைமுறைகள் முழுமை அடைந்தவுடன் பதிவு எண் வழங்கப்படும்.

  6. பதிவு செய்யப்பட்ட சங்கங்களின் பட்டியல் இவ்வாணையரகம் இணையதள பக்கத்தில் வெளியிடப்படும்.

  7. அரசு விழாக்களில் கலந்து கொள்வதற்கு தள்ளுபடிகள் அல்லது பிற சலுகைகள் வழங்கப்படாது.

  8. அங்கீகரிக்கப்பட்ட எந்த சங்கமும் மாநில அரசு அல்லது இந்த ஆணையர்களின் சின்னத்தைப் பயன்படுத்த அனுமதிக்கப்படாது.

  9. அங்கீகரிக்கப்பட்ட அனைத்து சங்கங்களும் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தங்கள் அங்கீகாரத்தை புதுப்பிக்க வேண்டும். அலுவலக முகவரி மற்றும் அலுவலகப் பணியாளர்களின் பெயர் மாற்றம் இருந்தால், தெரிவிக்கப்பட வேண்டும். அங்கீகாரத்தை புதுப்பிக்காத சங்கங்களின் அங்கீகாரம் தானாகவே ரத்து செய்யப்பட்டு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து அவற்றின் விவரங்கள் நீக்கப்படும்.

  10. அங்கீகாரம் புதுப்பித்தல் மற்றும் சங்கங்களின் முகவரிகளை மாற்றுவதற்கான விண்ணப்பம் இந்த ஆணையரகத்தில் நேரடியாக அல்லது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பெறலாம்.

  11. அரசு / இந்த ஆணையரகம், எந்த ஒரு சங்கம் / அமைப்பின் அங்கீகாரத்தை எந்த நேரத்திலும், எந்த காரணமும் தெரிவிக்காமல் மற்றும் முன் அறிவிப்பு இல்லாமல் ரத்து செய்யும் உரிமையை கொண்டுள்ளது.

  1. இந்த ஆணையரகத்தால் வழங்கப்பட்ட அங்கீகாரச் சான்றிதழின் நகல்.

  2. கடைசி மூன்று வருட சங்கத்தின் ஆண்டு அறிக்கை மற்றும் தணிக்கை செய்யப்பட்ட கணக்கு அறிக்கை.

  3. சங்க உறுப்பினர்களின் பெயர், முகவரி மற்றும் மின்னஞ்சல் கொண்ட பட்டியல்.

  4. முழு முகவரி மற்றும் மின்னஞ்சல் முகவரியுடன் கூடிய உறுப்பினர்களின் திருத்தப்பட்ட பட்டியல்.

அங்கீகாரத்தைப் புதுப்பிப்பதற்கு மேலே உள்ள விவரங்களை இவ்வாணையரகத்திற்கு அனுப்பவும் :

ஆணையர்,

அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம்,

எழிலகம் இணைப்பு கட்டிடம், சேப்பாக்கம், சென்னை 05, தமிழ்நாடு, இந்தியா.

மின்னஞ்சல் : nrtchennai@tn.gov.in / nrtchennai@gmail.com

+91-44-2852 5648

  1. அயல்நாட்டிலுள்ள தமிழ்ச்சங்கங்களை பதிவு செய்வதற்கான விண்ணப்பம்.

  2. இந்தியாவிலுள்ள தமிழ்ச்சங்கம் (தமிழ்நாட்டிற்கு வெளியே) பதிவு செய்வதற்கான விண்ணப்பம்.

  3. தமிழ்ச்சங்க பதிவினை புதுப்பிப்பதற்கான விண்ணப்பம்.

உலகின் பல நாடுகளிலும், இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலும் உள்ள தமிழ்ச் சங்கங்கள் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும், தமிழர்களின் நலனுக்காகவும் பாடுபட்டு வருகின்றன. அத்தகைய தமிழ் அமைப்புகளைத் அங்கீகரித்து அவர்களுடன் ஒருங்கிணைப்பதன் மூலம் அவர்கள் ஆற்றிவரும் சேவைகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படும்.

வெளிநாடுகளிலும், இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலும் உள்ள அனைத்து தமிழ் சங்கங்கள்/நிறுவனங்கள் இந்த ஆணையகத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

reach_us