சட்ட உதவி


  1. Government of Tamilnadu launches "Pravasi Legal Aid Scheme" (PLAC) through NRT-ROOTS to assist non-resident Tamils in their legal problems abroad.

  2. Its aim is to provide necessary assistance in legal problems faced by non-resident Tamils.

  3. Work-related, passport, visa and other social issues are covered under this assistance scheme.

  4. Hospital treatment related to punishment and imprisonment is also included in the plan.

  5. Apart from GCC countries, this assistance will also be available to residents of Iraq and Middle Eastern countries.

  6. Appointment of Legal Liaison Officers Applications are being accepted from Tamil lawyers interested to work as Legal Liaison Officers of the Pravasi Legal Aid Cell started by the Government of Tamilnadu to provide legal assistance to non-resident Lawyers (male/female) who have practiced law for at least 2 years in Tamilnadu and have experience in handling legal issues in their respective countries are eligible to be appointed as Legal Liaison Officers. 

  7. The government has appointed a special committee to select the deserving candidates from among the applicants.

  8. Legal Liaison Officers are invited to Saudi and Qatar Application form for consideration as Legal Liaison Officer Eligibility criteria for selection as Legal Liaison Officer The applicant must be a Tamil.

  9. Must be able to speak and write Tamil language.

  10. The person should be able to handle the local languages ​​of the respective foreign countries.

  11. Must have practiced as a lawyer for at least 2 years in Tamilnadu (Female/Male).

  12. Advocates interested to act as Legal Liaison Officer should fill the above application completely and send it along with the relevant contents to the Chief Executive Officer, The Commissionerate for Welfare of Non-Resident Tamils (NRT) in chennai at Tel: +91-44-28515288 / +9600023645, Email: nrtchennai@gmail.com / nrtchennai@tn.gov.in

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் “வெளிநாடுகளில் புலம்பெயர்ந்துள்ள தமிழர்களுக்கு என தனியாக சட்ட உதவி மையம் அமைக்கப்படும்”, என்று அறிவித்தார்.

தமிழர்கள், வேலையின் பொருட்டு அயல்நாடுகளுக்கு செல்வது சமீபகாலமாக கணிசமாக அதிகரித்து வருகிறது, இங்குள்ள பதிவுபெறாத முகவர்கள் வெளிநாட்டு வேலையை எதிர்பார்த்து கொண்டிருக்கும் நபர்களை, வெளிநாட்டில் நல்ல வேலை, அதிக சம்பளம், வேலைப்பளு குறைவு என்று மூளைச்சலவை செய்து சுற்றுலா விசாவில் வேலைக்கு அனுப்புகின்றனர்.

அவ்வாறு வேலைக்கு சென்ற நபர்கள் அந்நாடுகளில் உள்ள காவல்துறையால் கீழ்க்கண்ட காரணங்களுக்காக (ஏதாவது ஒன்றில்) கைது செய்யப்படுகின்றனர்.

  1. சுற்றுலா விசாவில் வேலைக்கு செல்லுதல்.

  2. விசா காலம் முடிந்த பின்னரும் அயல்நாடுகளில் தங்கியிருத்தல்.

  3. முறையான ஆவணங்கள் இன்றி இருத்தல்.

  4. வேலைக்கு அமர்த்திக் கொள்ளும் நிறுவனங்கள் காவல்துறையில் குற்றம் சுமத்துதல்.

  5. பணியிடத்தில் நிகழும் விபத்துகள்/சாலை விபத்துகள்.

இந்நேர்வுகளில் இவர்களுக்கு அயல்நாடுகளில் உள்ள நீதி மன்றங்களில் வழக்கினை கொண்டு செல்ல வேண்டிய அவசியம் உள்ளது. இந்த வழக்கில் இருந்து விடுதலை அடையும் நிலையில் மட்டுமே தாயகம் திரும்ப கூடிய சூழல் ஏற்படும்.

மேலும், அயல்நாடுகளில் வேலை வழங்குபவர்களால் தமிழர்களுக்கு ஏற்படும் கீழ்கண்ட பிரச்சனைகள் தொடர்பாகவும் நீதிமன்றம் செல்ல வேண்டியுள்ளது:

  1. உறுதியளிக்கப்பட்ட வேலை வழங்காமல் இருத்தல்

  2. உறுதியளிக்கப்பட்ட சம்பளம் வழங்காமல் இருத்தல்

  3. வேலை நேரத்திற்கு மிகுதியாக வேலை பார்க்க கட்டாயப்படுத்துதல்

  4. சட்டப்படியான விடுப்புகளுக்கு அனுமதி அளிக்காமல் இருத்தல்

  5. வேலை ஒப்பந்தம் முடிந்த பின்னரும் தாய் நாட்டிற்கு அனுப்பாமல் இருத்தல்

  6. வேலைக்கு சென்ற நாடுகளில், தொழிலாளர்களுக்கு உள்ள சட்ட உரிமைகளை மறுத்தல்

மேற்கூறிய பிரச்சனைகளுக்கு தீர்வு பெற நீதிமன்றத்தை நாடும் நிலையில் அயல்நாடுகளின் சட்ட சிக்கல்களாலும் அந்நாடுகளின் மொழி புரிதலின்மை, வழக்கு நடத்துவதற்கான மிக அதிகமான செலவீனம் காரணமாகவும், வழக்கு நடைமுறைகளை பின்தொடர இயலாமல் தாயகம் திரும்ப இயலா நிலை ஏற்படுகிறது அல்லது குற்றத்தை ஏற்றுக் கொள்ளவும், அதற்கான தண்டனை அனுபவிக்கவும் நேரிடுகின்றது.

மேலும், பணியின் பொருட்டு சென்று அயல்நாடுகளில் விபத்து போன்ற காரணங்களுக்காக உயிரிழக்கும் / காயமடையும் நபர்களுக்கான இழப்பீடு தொடர்பான வழக்குகள், கருணை மனு தொடர்பான வழக்குகளில் நீதி மன்றங்களில் முறையான பின்பற்றுதல் இல்லாததன் காரணமாக பல ஆண்டுகள் நிலுவை ஏற்படுகிறது.

இவ்வாறு சட்ட உதவி தேவைப்படும் அயலகத் தமிழர்களுக்கு உதவுவதற்காக தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் குறிப்பாக முதற்கட்டமாக வளைகுடா நாடுகள், சிங்கப்பூர், மலேசியா போன்ற தென் கிழக்கு ஆசிய நாடுகளில் “அயலகத் தமிழர் நல வாரியம்” சார்பாக சட்ட உதவி மையம் உருவாக்கலாம். மேலும், மேற்கத்தியநாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகளுடன் இணைந்து சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்யலாம்.

  1. சர்வதேச சட்ட விதிகள் தெரிந்த நபர்களை சட்ட ஆலோசகர்களாகக் கொண்ட Legal Firm தமிழ் நாட்டில் அமைக்கப்படும்.

  2. சம்பந்தப்பட்ட நாடுகளின் சட்டம் தெரிந்த நபர்கள் (para legal volunteers) legal coordinators ஆக அந்தந்த நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் வாயிலாக தெரிவு செய்யப்படுவார்கள்.

  3. அவ்வாறு தேர்வு செய்யப்படும் legal coordinators அந்தந்த நாடுகளின் உள்ளூர் மொழியினையும், தமிழ் மொழியினையும் அறிந்தவராக இருத்தல் வேண்டும்.

  4. இவர்கள் பாதிக்கப்பட்ட நபர்களையும், வழக்கறிஞர்களையும், இந்திய தூதரகத்தினையும் ஒருங்கிணைக்கும் நபர்களாக செயல்படுவார்கள்.

  5. அயல்நாடுகளில் அடையாளப்படுத்தப்பட்ட (Identified) வழக்கறிஞர்களின் பட்டியலை தெரிவு செய்யலாம். இதற்காக இலவச சட்ட உதவி செய்யும் வழங்கறிஞர்களை தெரிவு செய்யலாம், தேவைப்படும் இனங்களில், ‘தக்க வைத்துக்கொள்ளும்’ (Retainer fee) கட்டணம் பெறும் வழங்கறிஞர்களை தெரிவு செய்யலாம்.

  1. அயல்நாட்டிற்கு படிப்பு மற்றும் வேலைக்காக சென்றவர்கள் தாங்கள் செய்யாத குற்றத்திற்காக அல்லது தன் மீது சுமத்தப்பட்ட வீன்பழியினை எதிர்கொள்ள வேண்டியவராக இருக்க வேண்டும்.

  2. அயல்நாடுகளில் பணியின் போது வேலை வழங்குபவருக்கு எதிராக தொடரப்படும் சம்பள நிலுவை, உடல் ரீதியான தாக்குதல் போன்ற வழக்குகள்.

  3. வேலை வழங்குபவரால் உள்நோக்கத்துடன் தொடரப்படும் பொய்யான வழக்குகள் .

  4. அயல்நாடுகளில் விபத்து போன்ற காரணங்களுக்காக உயிரிழக்கும் / காயமடையும் நபர்களுக்கான இழப்பீடு தொடர்பான வழக்குகள்.

  5. செய்யாத குற்றத்திற்காக தண்டனை விதிக்கப்பட்டுள்ள நபர்களின் கருனை மனுக்கள் (Mercy Petitions)

  6. அயல்நாடுகளின் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள அபராதங்கள், நிதி மீட்பு போன்ற இனங்களுக்கு சிறப்பு நேர்வுகளைத் தவிர, இந்த உதவி கிடைக்காது.

Lead Management

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Proin eget eleifend dolor, et maximus enim.

Lead Management

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Proin eget eleifend dolor, et maximus enim.

reach_us