அயலகத் தமிழர் அடையாள அட்டை விண்ணப்பிக்க / Apply for Non - Resident Tamil ID card here

வெளிநாடு வாழ் தமிழர்களின் குறைகளை களைதல்

Woman testimonial from Porto Magazine company

வெளிநாடு வாழ் தமிழர்களின் குறைகளை களைதல்

வெளி நாடுகளில் இன்னலுறும் தமிழர்களிடமிருந்தும், அவர்களது குடும்ப உறுப்பினர்களிடமிருந்தும் இத்துறையில் பெறப்படும் மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டு உரிய நடவடிக்கைகள் இத்துறை மூலம் எடுக்கப்ப்டுகிறது. தேவை அடிப்படையில், உரிய இந்திய துhதரகங்களுடன் தொடர்பு கொண்டு, தற்போதைய நிலையினை அறிந்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

இவற்றில் உடல் உபாதை / பாலியல் துஷ்பிரயோகம் குறித்தவை, இழப்பீட்டுத் தொகை மற்றும் இதர இனங்களில் வெளிநாடு வாழ் தமிழர் வேலை பார்த்த நிறுவனத்திடமிருந்து வரவேண்டிய தொகைகள், சட்ட விரோதமான முகவர்கள், இறந்தவர்களின் சான்றிதழ் பெறுதல், வேலை செய்பவர்களின் உரிமை மீறுதல், சம்பள பாக்கியை பெற்றுத் தருதல், முகவர்கள் குறித்த பிரச்சினைகள், வேலை செய்யும் நிறுவனத்தில் உள்ள சிக்கல்கள், வேலை குறித்த ஒப்பந்தத்தில் உள்ள குறைகள், வெளிநாடு வாழ் தமிழர்களை கண்டறிதல், கடத்தல், வெளிநாடுகளில் சிறையில் உள்ளோர், தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள், உரிய ஆவணங்கள் இல்லாமல் இருப்பவர்கள் போன்ற இனங்களில் மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

மேற்காணும் இனங்களில் உதவி குறித்து தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நல ஆணையரகம், சென்னை, தொலைபேசி எண்.+91-44-28515288 / +9600023645 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும்.

அவசர ஊர்தி சேவை

வெளிநாடு வாழ் தமிழர் நல ஆணையரகம் வெளிநாடுகளிலிருந்து வரும் தமிழர்களின் உடல்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்ல, தகுந்த சான்றிதழ்கள் (உம்) மருத்துவமனையின் வெளியேற்ற சீட்டு, இந்திய துhதரகத்திடமிருந்து வழங்கப்பட்ட சான்றிதழ் (நோயாளியாக இருப்பின்), இறப்பு சான்று, விமான பயணச்சீட்டு, கடவுச்சீட்டு போன்றவை (பூத உடலாக இருப்பின்) போன்றவற்றின் அடிப்படையில், இலவச அமரர் ஊர்தியும், வெளி நாடுகளிலிருந்து உடல் நிiலை பாதிக்கப்பட்ட நிலையில் திரும்பும் தமிழர்களுக்கு மருத்துவ வசதியுட்ன் கூடிய அவசர ஊர்தி மூலம் தகுந்த மருத்துவ மனைகளிலோ அல்லது அவர்களது வீடுகளுக்கோ கொண்டு சேர்த்திடவும் உதவுகிறது.

Woman testimonial from Porto Magazine company

மேற்காணும் இனங்களில் உதவி குறித்து தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நல ஆணையரகம், சென்னை, தொலைபேசி எண். Tel: +91-44-28515288 / +9600023645, Email: nrtchennai@gmail.com / nrtchennai@tn.gov.in ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும்.

Woman testimonial from Porto Magazine company

மதாத் (MADAD)

தூதரக உதவி தேவைப்படும் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களுக்கு உதவுவதற்காக மதாத் பயன்படுகிறது. வெளிநாடுகளில் உள்ள அனைத்து இந்திய தூதரகங்கள் மற்றும் சென்னையில் உள்ள மத்திய வெளிவிவகாரத் துறையின் கிளை தலைமைச் செயலகம் போன்றவை மதாத் இணையதளத்துடன் இணைந்து, அங்கு பதிவு செய்யப்படும் குறைகள் மீதான தொடர் நடவடிக்கையினை மேற்கொள்கின்றனர். மதாத் இணைய தளமானது பெறப்படும் மனுக்கள் மீது இறுதி தீர்வு கிடைக்கும் வரை உதவி புரிகிறது.

மதாத்-க்கான கைபேசி செயலியின் பயன்பாடு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. 24×7 கட்டணமில்லா உதவி எண் இம்மையத்தால் இயக்கப்பட்டு வெளிநாட்டு வேலை தொடர்பான பல்வேறு உதவிகளை பல மொழிகளில் இயங்கி வருகிறது.

மேற்காணும் இனங்களில் உதவி குறித்து Kshetriya Pravasi Sahayata Kendra (KPSK), சென்னை, தொலைபேசி எண்.:-(+91-44-32008401) (Email: helpline@owrc.in) https://madad.gov.in/, Android App Link, IOS Link

இறந்தவர்களின் பூத உடல்களை கொண்டு வருதல்

வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களின் உதவியுடன், அங்கு இறக்கும் தமிழர்களின் பூத உடல்களை இந்தியா கொண்டு வர விரைந்து நடவடிக்கை கேட்டுக்கொள்ளப்படுகிறது. இறந்தவர்களின் உடல்களை கொண்டு வர உரிய நாட்டிலிருந்து விமான சரக்கு சேவை கட்டணசீட்டு துhதரகம் மூலம் எடுக்கப்படுகிறது. தமிழகம் வந்தவுடன், விமான நிலையத்திலிருநது வெளி நாடு வாழ் தமிழர் நலத்துறை மூலம் இறந்த தமிழர்களின் பூத உடல்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்ல கட்டணமில்லா மருத்துவ அவசர ஊர்தி சேவை வழங்கப்படுகிறது.

குறிப்பிட்ட சில இனங்களில் இறந்தவர்களின் பூத உடல்களைக் கொண்டு வர தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள சுழல் நிதியிலிருந்து நிதி செலவிடப்படுகிறது.

Woman testimonial from Porto Magazine company

மேற்காணும் இனங்களில் உதவி குறித்து தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நல ஆணையரகம், சென்னை, தொலைபேசி எண். +91-44-28515288 / +9600023645 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும்.

reach_us