அயலகத் தமிழர் அடையாள அட்டை விண்ணப்பிக்க / Apply for Non - Resident Tamil ID card here

வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன்

Woman testimonial from Porto Magazine company

வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன்

தமிழர்கள் வணிகத்தின் பொருட்டும், படையெடுப்பின் பொருட்டும் குடியமர்வின் பொருட்டும் தொன்றுதொட்டு அயல்நாடுகளுக்குச் சென்றுள்ளனர். பொருளாதார காரணங்களுக்காகவும், பொருளாதாரம் உலக மயமாக்கப்பட்டதன் காரணமாகவும், வேலை தேடியும், வாழ்வாதாரத்திற்காகவும் ஒவ்வொரு வருடமும் அதிக எண்ணிக்கையில் தமிழர்கள் வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்து செல்கின்றனர்.

அரசு ஆணை எண்.1141, பொது (ம.வா-1) துறை, நாள் 13.12.2010, படி சென்னையில் உள்ள மறுவாழ்வுத் துறை ஆணையரகத்தில் வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன்காக்க தனியாக ஒரு பிரிவு ஏற்படுத்தப்பட்டு இந்த ஆணையரகத்தின் பெயர் "அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம்" என பெயர் மாற்றம் செய்யப்பட்டு 18.12.2021 முதல் இயங்கி வருகிறது. மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) "மாவட்ட நல அலுவலர் (வெளிநாடு வாழ் தமிழர்கள்)" ஆகவும் மற்றும் மாவட்ட தலைமை மேலாளர் (குற்றவியல்) அவர்களின் பொறுப்பின் கீழ் உள்ள பிரிவானது "மாவட்ட நல மையம் (வெளிநாடு வாழ் தமிழர்கள்)" ஆகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆணையரகம், பல்வேறு இந்திய தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து வெளி நாடுகளில் இன்னலுக்கு உள்ளாகும் தமிழர்களை தாயகம் மீட்டு வருதல், இறந்த தமிழர்களின் உடல்களை தாயகம் கொண்டு வருதல், இழப்பீடு பெற்று தருதல் போன்ற இனங்களில் வெளி நாடு வாழ் தமிழர்களின் குறைகளை தீர்த்து வைக்கிறது.

reach_us