இத்துறை பற்றி


தமிழர்கள் வணிகத்தின் பொருட்டும், பயணங்களின் பொருட்டும், குடியமர்வின் பொருட்டும், தொன்றுதொட்டு அயல்நாடுகளுக்குச் சென்றுள்ளனர். பொருளாதார காரணங்களுக்காகவும், பொருளாதாரம் உலக மயமாக்கப்பட்டதன் காரணமாகவும், வேலை தேடியும், வாழ்வாதாரத்திற்காகவும் ஒவ்வொரு வருடமும், அதிக எண்ணிக்கையில் தமிழர்கள் வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்து செல்கின்றனர்.

இந்த ஆணையரகம் வெளிநாடுகளில் உள்ள பல்வேறு இந்திய தூதரகங்களுடன் ஒருங்கிணைத்து, கீழ்கண்ட பணிகளை செயல்படுத்தி வருகிறது:

  1. வெளிநாடு வாழ் தமிழர்களின் குறைகளை தீர்ப்பது

  2. துன்பத்தில் இருக்கும் தமிழர்களுக்கு உதவுதல்

  3. அயல்நாடு முதலாளியிடமிருந்து அவர்களின் கோரிக்கைகளைத் தீர்ப்பதில் உதவுதல்

  4. வெளிநாடுகளில் இறக்கும் புலம்பெயர் தமிழர்களின் சடலங்களை, வெளிநாடுகளில் உள்ள அந்தந்த இந்திய தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து, தமிழ்நாட்டிற்கு கொண்டு வர உதவுவது ஆகும்

இப்போது இத்துறையின் பெயர் “அயலகத் தமிழர் நலன் & மறுவாழ்வுத்துறை ஆணையரகம்” என்று மாறி உள்ளது. புலம்பெயர்ந்த தமிழர்கள் நலனில் கவனம் செலுத்துவதைக் கருத்தில் கொண்டு, இந்தத் துறைக்காக, புலம்பெயர்ந்த தமிழர்கள் நலனுக்கான தனி அமைச்சர், தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு புலம்பெயர்ந்த தமிழர்கள் நலன்புரி (திருத்தம்) சட்டம் 2022 நிறைவேற்றப்பட்டு, 25.04.2022 அன்று தமிழ்நாடு அரசிதழில், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வசிக்கும் தமிழர்களுக்காக தமிழ்நாடு புலம்பெயர்ந்த தமிழர்கள் நல வாரியம் அமைப்பது குறித்து கவனிக்கப்பட்டது.

THIRU M.K.STALIN

Chief Minister of Tamil Nadu

Thiru Gingee K.S.Masthan

Minister for Minorities Welfare and Non Resident Tamils Welfare

அயலகத் தமிழர் நல வாரியம்


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 06.10.2021 அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், வெளிநாடுகளிலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் வாழும் தமிழர்களின் நலனைக் காக்க “அயலத் தமிழர் நல வாரியம்” அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

மேலும், 2011 ஆம் ஆண்டு புலம்பெயர்ந்த தமிழர்கள் நலச் சட்டம் பிரிவு 10 (1) ன்படி வெளிநாடு வாழ் தமிழர்கள் நலனுக்காக வாரியம் அமைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் 24.12.22 தேதியிட்ட அரசாணை எண்.827, பொது (ஆர்.எச்-2) துறையின் மூலம், 15 அரசு மற்றும் அரசு சாரா உறுப்பினர்களைக் கொண்ட “அயலத் தமிழர் நல வாரியம்” அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

Thiru Karthikeya Sivasenapathi

Chairman

Schemes


MEGP

Migrant Employment Generation Programme

SIMS

SPECIAL INITIATIVE FOR MIGRANTS (NEEDS-SIM)

Yenadhu Gramam

Is proposed to improve the infrastructure of the NRT’s

Reaching the Roots

Reaching Your Roots is a cultural tour programme by Tamil Ndu

Tamil Learning

A program to teach Tamil to the children

Testimonials


Our History


0
0
0
0

Our Location


Commissionerate of Rehabilitation and Welfare of Non Resident Tamils

14th Floor, Ezhilagam Annex Building,
Chepauk, Chennai 600 005,
Tamil Nadu, India.

Get Directions