NRT - Day Registration

அயலகத் தமிழர் நாள்-2025

4 ஆம் ஆண்டு அயலக தமிழர் தினம் 2025 நிகழ்வுகள்

  •  நம் கலை பண்பாட்டைப் பறைசாற்றும் விதத்தில் நாட்டுப்புற இசை, பொய்கால் குதிரை ஆட்டம், கூத்து, காவடி ஆட்டம் என நம் மண்ணின் கலைஞர்களால் நிகழ்த்தப்படும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை காண வாருங்கள்.

  •   புலம்பெயர்ந்த தமிழ்ப் ஆளுமைகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுடனும், கலந்துரையாடல்களில் ஈடுபடுங்கள். உலகப் பொருளாதார வளர்ச்சியில் தமிழ்ப் பண்பாட்டின் தாக்கம் குறித்து தரவுகளுடன் கூடிய பயன்மிக்க அமர்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.

  •   “வேர்களைத் தேடி” நிகழ்ச்சியின் மூலம் புலம்பெயர்ந்த தமிழ் இளைஞர்களை அவர்களின் வேர்களோடு இணைக்கும் விதமாக தமிழகம் முழுவதும் 15 நாள் பண்பாட்டு கலாச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டு. இந்த இளைஞர்கள் தமிழ் பாரம்பரியத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சியை நேரடியாக கற்றறிந்து, அவர்கள் வசிக்கும் நாடுகளில் அவற்றை பயிற்றுவிக்கும் தமிழகத்தின் கலாச்சார தூதர்களாக பணியாற்றுவார்கள்.

  •   கல்வி, தொழில்நுட்பம், கலை & கலாச்சாரம் மற்றும் இன்னும் பல துறைகளில் சிறந்து விளங்கும் உலகெங்கிலும் உள்ள புகழ்பெற்ற தமிழ் பிரமுகர்களை சந்திக்கவும்! புதிய தொடர்புகளை, உறவுகளை உருவாக்கி, உலகளாவிய தமிழ் அடையாளத்தை முன்னெடுத்துச் செல்லுங்கள்.

  •   மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், உலகம் முழுவதிலும் உள்ள புகழ்பெற்ற தமிழ் ஆளுமைகளுக்கு வழங்கப்படும் ‘கணியன் பூங்குன்றனார் விருதுகள்’ மற்றும் பாராட்டுக்களில் பங்கெடுத்து அவர்களின் அனுபவப் பயணத்தை அறிந்து கொள்ளுங்கள்.